ஆய்வுக் கட்டுரைக்கான விதிமுறைகள்
கட்டுரை எழுதும் முறை
- ஆய்வுக் கட்டுரை வழங்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழில் வழங்க வேண்டும்.
- ஆய்வாளர்கள் தங்கள் சொந்தச் சிந்தனையில் உருவான கட்டுரைகளையே அனுப்ப வேண்டும்.
- கட்டுரைகளுக்குத் தேவையான துணைத்தலைப்புகள், அடிக்குறிப்புகளுடன் பெயர், பணி அல்லது படிப்பு, நிறுவனம், முகவரி ஆகியவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
- இரண்டு பேர் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்படமாட்டாது.
- தேர்வு செய்யப்பெறும் கட்டுரைகள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும்.
- கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் முரண்பாடான பகுதிகளை நீக்கவும் கட்டுரைகளை நிராகரிக்கவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.
- ஆய்வுக் கட்டுரைகளின் முன்னுரை, முடிவுரை ஒருபத்தி அளவில்(5வரிகளில்) அமைதல் வேண்டும்.
- ஆய்வுக் கட்டுரைகள் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் ஆகியவற்றில் இதற்கு முன்பாக இடம் பெற்றிருக்கக் கூடாது.
- ஆய்வுக் கட்டுரையை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்து வேர்டு (Word) கோப்பாக என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
- ஆய்வுக் கருத்துக்கள் அனைத்திற்கும் கட்டுரையாளரே பொறுப்பாளர் ஆவார்.